மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 14:55 IST
மாண்டஸ் புயல் எச்சரிக்கை, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புகளை தீவிரமாக்கி உள்ளன. சென்னை எண்ணூர், பழவேற்காடு முதலான கடலோரங்களில், அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது. மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.. பாதுகாப்பான இடங்களில் படகுகளை வைத்தனர். எண்ணூர் போன்ற சில பகுதிகளில், படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்க முடியாமலும் மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வாசகர் கருத்து