மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 15:18 IST
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சாலையோரம் வடிகால்கள் அமைத்தும் இந்தப் பணிகள் நடக்கின்றன. செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திரம் பகுதிகளில் மட்டும் மழை வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். வாகனங்களைச் சிறைப் பிடித்தனர். கால்வாய் அமைக்காவிட்டால் வெள்ள நீர், ஊருக்குள் புகுந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து