மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 16:07 IST
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார் கோயில் பழமையானது. திருக்கரம்பனூர் என்று அழைக்கப்படும் உத்தமர் கோயிலில் பூர்ணவல்லி தாயார் உடனுறை புருஷோத்தமப் பெருமாள், சவுந்தரபார்வதி உடனுறை பிச்சாடனேஸ்வரர், ஞானசரஸ்வதி உடனுறை பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்ட ஒரே ஸ்தலமாக போற்றப்படுகிறது. மகா கார்த்திகையை முன்னிட்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் மும்மூர்த்திகள் ஒரு சேர எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி புருஷோத்தம பெருமாள், பிரம்மதேவர், பிச்சாடனேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து