மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 16:40 IST
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை டூ தூத்துக்குடி செல்லும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை டூ ஷீரடி செல்லும் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல, ஷீரடி, தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் விமான சேவைகளும் இன்று இல்லை. இதுதவிர, சென்னையில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், மும்பை, கண்ணூர், இலங்கை, டாக்கா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 11 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன.
வாசகர் கருத்து