மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 12:33 IST
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கடலோர பகுதிகளில், கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. பத்தடிக்கும் மேல் அலைகள் சீறி எழுகின்றன. கல்பாக்கம், மீனவ குப்பம், சின்ன குப்பம், நடுக்குப்பம் முதலான பகுதிகளில் மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைத்துள்ள மீனவர்கள், புயல் எப்போது கரையைக் கடக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
வாசகர் கருத்து