மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 14:57 IST
திருச்சி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக பிளஸ் 2 வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட கிரிக்கெட் போட்டி சாரநாதன் இன்ஜினியிரிங் கல்லுாரி மைதானத்தில் துவங்கியது. 25 ஓவர் போட்டியாக நடக்கிறது. காலிறுதி வரை லீக் முறையிலும், அதைத் தொடர்ந்து நாக் அவுட் முறையிலும் போட்டிகள் நடக்கிறது. 16 பள்ளி அணிகள் பங்கேற்றன. இப்போட்டி வரும் 14 ம் தேதி நிறைவு பெறுகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆல்பா பள்ளி 25 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி அணி 21 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 97 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து