மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 00:00 IST
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் அழகு சுந்தர வள்ளி தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள், கமிஷ்னர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏன் நிர்வாகிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாவில்லை என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக கவுன்சிலர் மணிகண்டன், விசிக கவுன்சிலர் வீரமணி ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து