மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 16:22 IST
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பழைய இரும்புக் கடைகள் உள்ளன. இங்கு திருட்டு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு உடைக்கப்படுவதாக, புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் பழைய இரும்புக் கடைகள் மற்றும் முக்கிய சாலைகளில் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டை கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் திறந்துவைத்தார். சிசிடிவி கேமராக்கள் மூலம் வாகன திருட்டுக் குற்றவாளிகள் எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது என எஸ்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.
வாசகர் கருத்து