மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 00:00 IST
கோவை மாவட்டம், சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் நகை, பணம் திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். முபாரக் அலி, சரவணன், ஜெகன் நாதன் ஆகிய மூன்று பேரிடம் இருந்து ₹13 லட்சம் மதிப்புள்ள, 32 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ₹1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தையும் மீட்டனர். பணம், நகைகளை சூலூர் போலீஸ் நிலையத்தில், உரியவர்களிடம் எஸ்.பி. பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். நகைகளை மீட்ட போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு கூறினார். மக்கள் சால்வை அணிவித்தனர்.
வாசகர் கருத்து