மாவட்ட செய்திகள் டிசம்பர் 13,2022 | 18:31 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை யில் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு, கடந்த மூன்று மாதங்களாக கொள்முதல் விலை வழங்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் பணம் வழங்க வேண்டும், மாதாந்திர வரவு செலவு கணக்குகளை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து