மாவட்ட செய்திகள் டிசம்பர் 15,2022 | 00:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி இருந்து சென்னை நோக்கி கீரை மூட்டைகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்றது. பெங்களூர்- சென்னை பைபாஸ் சாலையில் வாணியம்பாடி அருகே லாரியின் முன் சக்கரம் உடைந்தது. கட்டுப்பாட்டை விழுந்த லாரி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் கணேசன், கிளீனர் கோவிந்தராஜ் மற்றும் சர்வீஸ் சாலையில் நடந்து சென்ற ஒருவர் என 3 படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால்க வாணியம்பாடி-வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
வாசகர் கருத்து