மாவட்ட செய்திகள் டிசம்பர் 15,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் பகுதியில் 13-ம் நூற்றாண்டு நடாவி கிணறு உள்ளது. விஜயநகர அரசர்கள் சுரங்கம் போன்ற அமைப்பில், கட்டிய கிணறு இது. தரைத் தளத்தில் இருந்து 47 படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே சென்றால், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 16 கால் மண்டபமும் அதனுள் கிணறும் இருக்கும். விசேஷ நாட்களில் இந்தப் பகுதியில் தண்ணீரை இறைத்துவிட்டு, காஞ்சி ஸ்ரீவரத ராஜ பெருமாளுக்கும், ராமர் லட்சுமணனுக்கும் வழிபாடு நடத்துவார்கள். தொடர் மழை காரணமாக இந்த நடாவி கிணறு, நான்கு படிக்கட்டுகள் மட்டுமே தெரியும்படி தண்ணீர் மூழ்கி உள்ளது.
வாசகர் கருத்து