மாவட்ட செய்திகள் டிசம்பர் 15,2022 | 15:27 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்குள்ள முட்புதரில் குட்டி யானை ஒன்றை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். இறந்த ஆண் யானைக்கு 5 வயது எனவும், இறைதேடி சென்ற போது கால் இடறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆண் யானை குட்டி பலியான சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து