பொது டிசம்பர் 16,2022 | 19:07 IST
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் 3862 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்காக அக்டோபர் 10ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தொழிற்பூங்காவுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் நலனில் தமிழக அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழிற் பூங்காவுக்காக கையகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எந்தவித கட்டாயமும் இன்றி விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்
வாசகர் கருத்து