மாவட்ட செய்திகள் டிசம்பர் 17,2022 | 15:18 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அங்குத்தி சுனையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். தண்ணீரில் மூழ்கி விளையாடிய கோவிந்தன் மீண்டும் வெளிய வரவில்லை. தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நீருக்கு அடியில் பாறையில் சிக்கியிருந்த கோவிந்தன் உடலை மீட்டனர். அவருடன் குளிக்கச் சென்ற கல்லூர் சின்னத்தம்பி, அத்திப்பாடி சத்யராஜ், புதுக்காடு குமரேசன் ஆகியோரை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். இறப்பதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட கோவிந்தனின் வீடியோ வெளியாகி அப்பகுதியினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாசகர் கருத்து