மாவட்ட செய்திகள் டிசம்பர் 19,2022 | 11:09 IST
கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை செல்வர். தஞ்சையில் அமைந்துள்ள ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் பரிவார தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஐயப்பனுக்கு முப்பதாம் ஆண்டு மணிவிழா பூஜையை முன்னிட்டு 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 18 படிகளில் தீபம் ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலையில் ஐயப்ப பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து ஐயப்பuன வழிபட்டனர்.
வாசகர் கருத்து