மாவட்ட செய்திகள் டிசம்பர் 21,2022 | 00:00 IST
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை , விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 100 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கரும்பு தோகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து கலெக்டர் அலுவலகம் முன் தடுப்புகள் வைத்தனர். இதனை தள்ளிக் கொண்டு சென்ற விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்எல்ஏ உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்
வாசகர் கருத்து