மாவட்ட செய்திகள் டிசம்பர் 24,2022 | 18:42 IST
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. 3 மாத பயிரான முட்டைகோஸுக்கு 1 ஏக்கருக்கு 80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ 20 ரூபாய்க்கு விற்றாலும், விவசாயிகளிடம் இருந்து 2 முதல் 3 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர். குறைவான விலைக்கு கேட்பதால், வேதனையடைந்த விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டுவிட முடிவு செய்துள்ளனர். ஒரு சிலர் மாட்டிற்கு தீவனமாக அளித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து