பொது டிசம்பர் 25,2022 | 10:00 IST
தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நேற்று இரவில் இருந்து விட்டு விட்டு மழை பெய்தது. மழையில் நனைந்துக்கொண்டே சர்ச்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர். 2001 ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வட தமிழகத்தில் மழை கொட்டியது. அதன் பிறகு 2003ல் லேசான மழை இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு கிறிஸ்தமஸ் அன்று மழை பெய்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பரவலாக மழை இருக்கும் என தெரிவித்தார்.
வாசகர் கருத்து