பொது டிசம்பர் 26,2022 | 10:14 IST
தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள ஆண்டாள் தாயார் உற்சவர் சன்னதியில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், ஆண்டாள் தாயாரின் கண்கள் திறந்திருப்பதாக சொல்லி, பக்திப்பரவசம் அடைந்தனர். இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால் சுற்று வட்டார மக்கள் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்து ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து