மாவட்ட செய்திகள் டிசம்பர் 27,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டை மின்வாரிய ஊழியர்களுக்கான களப்பணி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, பணியின் போது ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஊழியர்கள் மழைக்காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான கையுறை, தலைக்கவசம், மழைநீர் தடுப்பு உடை, மற்றும் பணி மேற்கொள்வதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை மின்வாரிய நிர்வாகம் வழங்குவதில்லை என குற்றம் சாட்டினர். களப்பணி ஆற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து