மாவட்ட செய்திகள் டிசம்பர் 28,2022 | 00:00 IST
கரூர் ஐயப்பா சேவா சங்கத்தின் 36 ஆம் ஆண்டு விழாவையொட்டி உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை பசுபதீஸ்வர ஐயப்பன் கோயிலில் நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கி கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக நன்மை வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 31-ம் தேதி சீதா கல்யாணம், ஐயப்பன் உற்சவம் நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து