மாவட்ட செய்திகள் டிசம்பர் 29,2022 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராஜகோபாலசுவாமி கோவிலில், பகல் பத்து ஆறாம் நாளில், விஜயராகவ நாயக்கர் சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . யானை செங்கமலம், பெருமாளை மூன்று முறை சாமரசம் வீசியபடி வலம் வந்ததது அதனையடுத்து, ராஜகோபாலசுவாமி எதிரே ஒவ்வொரு ஆழ்வாராக எழுந்தருளினர். நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் , சேனை முதல்வர் என 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். தொடர்ந்து ஹனுமான் அவருக்கே உரித்தான வேகத்துடன் எழுந்தருளினார் . முத்து வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆழ்வார் பெருமக்களுக்கு ராஜகோபால பெருமாள் சார்பில், தீட்சிதர்கள் மாலை அணிவித்து, சடாரி மரியாதை செய்தனர்.
வாசகர் கருத்து