பொது டிசம்பர் 29,2022 | 12:26 IST
திருவள்ளூர் அடுத்த, கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலிபால் விளையாட்டு வீரர் ஆகாஷ். வயது 27. நேபாளத்தில் நடந்த போட்டியில் பங்கேற்க சென்ற ஆகாஷ், கடந்த 25ம் தேதி ஓய்வு அறையில் மாரடைப்பால் இறந்தார். பிரேத பரிசோதனை முடிந்து உடல், நேபாளத்தில் இருந்து சென்னை ஏர்போர்ட் கொண்டு வரப்பட்டது. அங்கு ஆகாஷின் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஏர்போர்ட்டில் இருந்து கைவண்டூர் கிராமத்திற்கு ஆம்புலன்சில் உடல் எடுத்து செல்லப்பட்டது. அப்போது அவரது நண்பர்கள், உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் டூவீலரில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். கைவண்டூரில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட ஆகாஷ் உடலுக்கு அரசு தரப்பில், பால்
வாசகர் கருத்து