மாவட்ட செய்திகள் டிசம்பர் 29,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு, கோவையிலிருந்து சிலிண்டர் லாரி வந்தது. கூடலூர் ராஜகோபலபுரம் அருகே வந்த போது லாரியின் பின் டயரில் திடீரென தீ பற்றி எரிந்தது. அருகிலிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். லாரியை நிறுத்திய டிரைவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாசகர் கருத்து