மாவட்ட செய்திகள் டிசம்பர் 30,2022 | 14:37 IST
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் 11 உதவியாளர்களூக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதற்கு தீர்வு காணும்படி அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதற்கு பதிலாளித்து ஆணையாளர் மகேஸ்வரி கூறுகையில், துப்புரவு பணியாளர்கள் என பணியில் சேர்க்கப்பட்டு நகராட்சி விதிகளை மீறி அலுவலகப் பணியாளர்களாக பணியாற்றி வருவதும், அதற்கு ஆதரவாக முன்னாள் நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தவறு. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்படும். அவரின் ஆலோசனை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி சட்ட விதிகளை மீறி தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்தும் அதிகாரம் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மன்ற கூட்டத்திற்கு இல்லை என கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆணையாளரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகத்தில் உதவியாளர்களாக பணியாற்றி வரும் 11 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். கலெக்டரிடம் புகார் கொடுக்கவும் முடிவு செய்தனர்.
வாசகர் கருத்து