மாவட்ட செய்திகள் டிசம்பர் 30,2022 | 00:00 IST
புதுச்சேரியில் பாலர் பட்டாம்பூச்சிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரமான கல்வி வழங்க வேண்டும், போதை இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தினர். முன்னதாக ராஜா திரை அரங்கம் அருகில் இருந்து வ.உ.சி. அரசுப் பள்ளி வரை அவர்கள் ஊர்வலம் சென்றனர். தங்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அரசு இவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்
வாசகர் கருத்து