மாவட்ட செய்திகள் டிசம்பர் 30,2022 | 00:00 IST
கோவை சூலுார் ஆர்.வி.எஸ். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் அண்ணா பல்கலைக்கு உட்பட்ட மண்டலம் ஒன்பது இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சி.ஐ.டி. தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 19 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சி.ஐ.டி. அணி மற்றும் ஆர்.வி.எஸ். அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய சி.ஐ.டி. கல்லுாரி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தது. அடுத்து களமிங்கிய ஆர்.வி.எஸ். அணியினர் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்தனர். போட்டி முடிவில் ஆர்.வி.எஸ். அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து