மாவட்ட செய்திகள் டிசம்பர் 31,2022 | 00:00 IST
திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் ஆண்டு திருவிழா கடந்த டிசம்பர் 29 ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கரகம் பாலித்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் விழா கணபதி ஹோமத்தோடு நடைபெற்றது. ஸ்ரீபகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகள், அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. கம்பத்தடிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து