சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 01,2023 | 15:40 IST
தமிழரின் தொன்மையான நாகரீகத்தின் அடையாளம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் அருகே சொக்கத்தேவன்பட்டி ஊருணிக்குள் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு இனக்குழு தலைவர்களின் நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. முதல் நடுகல் 3 அடி அகலம், 4 அடி உயரம் கொண்டது. அதில் குதிரையின் மீது இனக்குழு தலைவன் அமர்ந்து வலது கையில் வாளையும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்தது போன்று கலைநயத்துடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனருகே ஒரு பெண் ஒருகையில் மலர் செண்டும், மறுகையில் பொற்கிழி முடிப்பும் வைத்துள்ளது போல் நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து