மாவட்ட செய்திகள் ஜனவரி 01,2023 | 00:00 IST
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூரில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது . திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து