Advertisement

மலைப் பாதையில் எரிந்த கார்

மாவட்ட செய்திகள் ஜனவரி 03,2023 | 10:37 IST

Share

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தை சேர்ந்த வில்சன், 3 பேருடன் இண்டிகா காரில், கோவை சரவணம்பட்டிக்கு சென்று ஊர் திரும்பினார். குன்னூர்,மேட்டுப்பாளையம் சாலையில், மரப்பாலம் அருகே இரவு 7:00 மணியளவில் காரில் இருந்து புகை வந்தது. சாலையில் காரை நிறுத்தியதும், தீ மளமளவென எரிந்தது. தகவலின் பேரில், குன்னூர் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. சாலை ஓரத்தில் நிறுத்தியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. குன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X