மாவட்ட செய்திகள் ஜனவரி 04,2023 | 00:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்த 20 வயது சூர்யா. உடல் பருமனைக் குறைக்க தனியார் நிறுவனத்தை நாடினார். பத்து நாளாக அந்த நிறுவனம் வழங்கிய மருந்துகளை உட்கொண்டு வந்தார். உடல் எடை குறைந்து வந்த நிலையில், திடீரென உடல் நலம் மோசமானது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்ற சூர்யா, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் பக்க விளைவுகளால் உயிரிழந்தாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து