மாவட்ட செய்திகள் ஜனவரி 05,2023 | 14:54 IST
சிவகங்கை அருகே அலுபிள்ளைதாங்கி கிராமத்தில் 400 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தனர். கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருவதால் மழை நீர் நெல் வயலை சூழ்ந்தது. மழை நீர் வடிய கால்வாய் வசதி இல்லை. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்கள் மழை நீரில் மூழ்கி முளைக்க துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து