மாவட்ட செய்திகள் ஜனவரி 05,2023 | 18:34 IST
பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான மாணவியர் டேக்வாண்டோ போட்டி, நிர்மலா மகளிர் கல்லுாரியில் நடந்தது. பல்வேறு எடை பிரிவுகளில் மாணவிகள் போட்டியிட்டனர். 46 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரி நிமிஷா, 49 கிலோ எடை பிரிவில் நிர்மலா கல்லுாரி சுஜித், 53 கிலோ எடை பிரிவில், ஹரிபிரியா, 57 கிலோ பிரிவில் பி.எஸ்.ஜி., கல்லூரி அருணா, 62 கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லுாரி சபிதா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். 67 கிலோ எடை பிரிவில், பி.எஸ்.ஜி., கல்லூரிஅபிமா, 73 கிலோ எடை பிரிவில் நிர்மலா கல்லுாரி அபிநயா, மற்றும் 73 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில் நிர்மலா கல்லுாரி மாணவி சுபா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
வாசகர் கருத்து