மாவட்ட செய்திகள் ஜனவரி 06,2023 | 13:20 IST
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது பையனூர் ஊராட்சி. இங்குள்ள நீர்வரத்து கால்வாயை 20 ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை ஆக்கிரமித்து பயன்படுத்தியது. இதனால் அருகில் உள்ள வாழைமரத்து குட்டை நீர்வரத்தின்றி வறண்டது. ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்பை அகற்ற தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற காலம் தாழ்த்தியதால் சப்-கலெக்டர் சஜ்ஜீவினா உத்தரவின் பேரில் 40 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
வாசகர் கருத்து