மாவட்ட செய்திகள் ஜனவரி 06,2023 | 15:23 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சோலையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அன்பு-மாதம்மாள் தம்பதி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சிவஸ்ரீ. குழந்தையின் பெரியப்பா சண்முகம் அவரது மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து பெற்றோர் வேலைக்கு சென்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கியது. நீண்ட நேரமாக குழந்தையை தேடிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றதில் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த கல்லாவி போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து