மாவட்ட செய்திகள் ஜனவரி 07,2023 | 12:06 IST
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து, சமத்துவப் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். சாதி, மத, பாகுபாடு இல்லாமல் ஒன்று கூடி, பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து, மண்பானையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வைத்து, கரும்புகளை கட்டி குடிசைகளை அமைத்து, உற்சாகமாக கொண்டாடினர். மேலும், கல்லூரி மாணவிகள், கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்னர்.
வாசகர் கருத்து