அரசியல் ஜனவரி 07,2023 | 00:00 IST
சேலம் ஏத்தாப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், நேற்று முன்தினம் 45 வது பிறந்தநாளை ஆதவாளர்களுடன் கொண்டாடினார். பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் அடியில் நடுரோட்டில் டேபிள் போட்டு, கேக் வெட்டினார். வானங்களை நிறுத்தி கொண்டாட்டம் தொடர்ந்தது. அன்பழகனுக்கு மாலை போட்டு, அண்ணன் வாழ்க என கோஷம் போட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் சாலையே ஸ்தம்பித்தது.
வாசகர் கருத்து