பொது ஜனவரி 08,2023 | 14:22 IST
ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஓட்டலை மூடிவிட்டு வீட்டுக்கு போனார். நள்ளிரவு காரில் வந்திறங்கிய ஆசாமிகள், ஓட்டல் மீது பெட்ரோல் ஊற்றினர். அதன் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்து ஓட்டல் தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 பிரிட்ஜ் உள்ளிட்ட ஓட்டலில் இருந்த பல பொருட்கள் கருகின. 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அர்ஜுனன் கூறினார். சிசிடிவி வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். காரில் வந்து தீ வைத்து விட்டு நசியனூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கோவேந்திரன் என்பது தெரிந்தது. கோவேந்திரனும் அதே பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். தொழில் போட்டியில் அர்ஜுனன் ஓட்டல் மீது கோவேந்திரன் குண்டு வீசியது தெரிய வந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து