பொது ஜனவரி 09,2023 | 11:59 IST
சோசியல் மீடியாக்களில் தோன்றி டிப்ஸ் சொல்லி பிரபலமானவர் சித்தா டாக்டர் ஷர்மிகா. சென்னையில் ஆஸ்பிட்டலும் வைத்துள்ளார். இணையத்தில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் இவர் சொன்ன டிப்ஸ், கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும்; குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்; தினமும் 8 நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் என இவர் சொன்னதை நெட்டிசன்கள் பலர் வறுத்தெடுத்தனர். தவறான தகவல்களை சொல்வதாக கூறினர். இந்நிலையில் டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன் ஆஜராகி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து