மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 16:27 IST
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அணைக்கட்டு பகுதியில் சுந்தரவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதத்தில், ராணிப்பேட்டை நாதஸ்வர, தவில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சி நடத்துவர். இந்தாண்டு நிகழ்ச்சி இன்று கலை வளர் விழா என்ற பெயரில் நடந்தது. இதில் பல கலைஞர்கள் கலந்துகொண்டு, தொழில் வளர இசைத்து மகிழ்ந்து இறைவனை வழிபட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தவில், நாதஸ்வர கலைஞர்கள் முன்னேற்ற நலச் சங்கம் ஏற்பாடு செய்தது.
வாசகர் கருத்து