மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 18:50 IST
கோவா மாநிலம் பனாஜியில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. சிலம்பம் பிரிவில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. கோவையிலிருந்து 45 பேர் கலந்து கொண்டனர். தனிநபர், ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், குழு போட்டிகள் என நடத்தப்பட்டது. கோவை அணியினர் 45 தங்க பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தனர். கோவை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து