மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 19:51 IST
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய நகராட்சி தலைவர் முனவர்ஜான், 2 டன் கழிவுகள் வாரம் ஒருமுறை சேகரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது என்றார். கட்டிடக் கழிவுகளை அகற்றாமல் உள்ள கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நகராட்சி ஆணையர் குமரன், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றனர்.
வாசகர் கருத்து