மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 00:00 IST
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். 2 வாரங்களுக்கு முன், சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் இருந்து முரளிதரன் வயது 21, என்ற வாலிபர் வந்தார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். தகவலறிந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் முரளிதரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
வாசகர் கருத்து