மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 14:23 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் கலவரம் ஏற்பட்டது. சுமார் 145 நாள் பள்ளி நேரடியாக இயங்காமல் ஆன்லைனில் நடந்தது. நீதிமன்ற உத்தரவால், டிச 5 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்புகள் துவங்கின. பள்ளி நிர்வாகம் மீண்டும் நீதிமன்றத்தை நாடி, 5 முதல் 8-ம் வகுப்புவரை ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி கேட்டது. அனுமதி கிடைத்ததால் அந்த மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டது.
வாசகர் கருத்து