மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 16:16 IST
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யாமல் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது. நீர் ஏற்றும் நிலையத்தை கண்காணித்த போது அதிகாரிகள் துணையுடன் தண்ணீர் திருடு போவது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமுகை-சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து