மாவட்ட செய்திகள் ஜனவரி 11,2023 | 18:37 IST
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அண்டக்குடி புதூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 70 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர், டிஜிட்டல் கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை வாங்க முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் முயற்சி எடுத்தனர். இதற்காக வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி நிதி வசூலித்தனர். 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்தனர். சீர்வரிசை பொருட்களுடன் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து கல்வி சீர் வரிசை பொருட்களை வழங்கினர்.
வாசகர் கருத்து