பொது ஜனவரி 12,2023 | 10:55 IST
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. ராப்பத்து உற்சவத்தில் கடைசி நாளில் சொர்க்கவாசல் மூடப்பட்டது. நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி நிறைவு அடைந்தது. மோட்சம் பெற நம்மாழ்வார் நம்பெருமாள் திருவடியில் சரண் அடைந்தார். அவரது உடல் முழுவதும் துளசியால் மறைத்து, நம்பெருமாள் மோட்சம் அளித்தார். திருமாமணி மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து