சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 12,2023 | 11:36 IST
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மெயின் ரோட்டில் கர்நாடகாவில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை காட்டு யானை வழி மறித்தது. சிலர் பஸ்ஸில் இருந்து இறங்கி யானையை வன பகுதிக்குள் விரட்ட முயன்றனர். மாறாக யானை அவர்களை விரட்ட தொடங்கியது. தலை தெறிக்க ஓடி பஸ்சில் ஏறினர். டிரைவர் ரிவர்சில் பஸ்சை இயக்கினார். பஸ்ஸை நோக்கி ஓடி வந்த யானை, பின்னோக்கி தள்ளியது. அதில் முன்புற கண்ணாடி உடைந்து சிதறியது. உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அலறினர். சிறிது நேரத்தில் யானை தானாகவே அங்கிருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்றது.
வாசகர் கருத்து